அடுத்தாண்டு சந்திரயான்-2 விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்

சென்னை:
ந்திரயான் -2 விண்கலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவப்படும் என்று இந்திய விண்வெளித்துறை ஆய்வகத்தின் தலைவர் கிரண்குமார்
தெரிவித்தார். சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலைக் கழகத்தின்7 ம் ஆண்டு பட்டமளிப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக
இஸ்ரோ தலைவர் ஏ.எஸ்.கிருஷ்ணகுமார் பங்கேற்றார். பின்னர் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிவிட்டு உரையாற்றிய அவர்,
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரியில் சந்திரயான் -2 விண்கலத்தை நிலவில் தரை இறக்குவதற்கான கருவியின் சோதனை நடைபெற்று வருவதாக
குறிப்பிட்டார். விண்வெளியிலிருந்து பூமியை கண்காணித்து, கடல், சுற்றுச்சூழல், நீர்வள ஆதாரங்கள் தொடர்பாக அரசுக்கு
முக்கிய தரவுகளை இஸ்ரோ அளித்துவருவதாகவும், இவை தேசிய அளவிலான திட்டங்கள் மற்றும் கொள்கைகள்
வகுக்கு உதவுகின்றன என்று அவர் கூறினார்.

புயல் உருவாகும் இடம், மீன்கள் கிடைக்கும் இடங்கள், புயல் எச்சரிக்கை ஆகியவை குறித்து மீனவர்களுக்கு துல்லியமாக தெரிவிக்கும்
வகையில், திசைகாட்டும் செயற்கைக்கோள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார் அவர். வீனஸ் விண்கலம்
குறித்து தெரிவித்த அவர், இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறினார். மேலும் வசந்திரயான் 1-ஐ விட சந்திரயான் 2
நவீனமானது என்றார் அவர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Chandrayaan 2 mission launch likely in first quarter next year: ISRO Chairman, அடுத்தாண்டு சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்
-=-