ஸ்ரீஹரிகோட்டா:

ந்திராயன்-2 செயற்கைகோளானது  ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை கூறினார். இந்த செயற்கைகோள் யாருமே போகாத நிலவின் தென் துருவத்தை ஆராய செல்லும் என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய  இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை,  பள்ளி மாணவர்களுக்கு விண்வெளி தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்குவதற்காக யுவிகா 2019 என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திட்டத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

மாநிலத்திற்கு 3 பேர் வீதம், 108 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 2 வாரம் இஸ்ரோ பயிற்சி அளிப்பதாக கூறியவர், யுவிகா மூலம் திறனுடைய மற்றும் தேடல் உள்ள மாணவர்களை இந்தியா முழுவதும் தேடி பிடித்து, அவர்களை இஸ்ரோ வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,   வருகிற 22ஆம் தேதி பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் மூலம், ஆர்.எஸ்.ஆர் 2-பி என்கிற செயற்கை கோளை நிலை நிறுத்தபோவதாக தெரிவித்தார்.

மேலும்,  அடுத்த 5 ஆண்டுகளுக்கான இஸ்ரோவின் விண்வெளித்திட்டங்களை விளக்கிய சிவன், சூரியனின் வெளிப்பரப்பை ஆராய ஆதித்யா என்ற திட்டத்தை 2021ம் ஆண்டு செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில் சூரியன், சந்திரன், வீனஸ், உள்ளிட்ட ஏழு கிரகங்கள் தொடர்பான ஆய்வு நடத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

நிலவை ஆய்வு செய்யும் மங்கள்யான் 2 திட்டம் 2022ம் ஆண்டில் செயல்படுத்தப்படும் என்றும் 2023ம் ஆண்டு வீனஸ் கிரகத்திற்கு ராக்கெட் செலுத்தப்படும் என்றும் இஸ்ரோ தலைவர் குறிப்பிட்டார்.

மேலும்,  சந்திராயன்-2 செயற்கைகோளானது வரும் ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப் படும் என்றவர், இந்த விண்கலமானது  செப்டம்பர் 6-ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்றவர், இதுவரை யாருமே செல்லாத நிலவின் தென் துருவத்திற்கு சென்று சந்திராயன்-2 தரையிறங்கி விரிவான ஆராய்ச்சி நடத்தும் என்றும் கூறினார்.

இந்த இடத்தில்  இதுவரை யாருமே ஆராயடிவில்லை என்பதால், அங்கு நமக்கு  பல புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என்றவர், ஏற்கனவே  சந்திராயன்-1 நிலவில் நீர் உள்ளதாக கூறியது. அது போல சந்திராயன் 2 பல புதிய தகவல்களை நமக்கு தரும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

சந்திராயன்-2 விண்கலத்தைத் தொடர்ந்து, அடுத்த முயற்சியாக சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா L1 என்ற விண்கலத்தை அனுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக சிவன் தெரிவித்தார். இதற்கு மிஷன் ஆதித்யா என பெயரிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

விண்ணில் மிதக்கும் விண்வெளி குப்பைகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு பல்வேறு வழிகளை இஸ்ரோ ஆராய்ந்து வருவதாக  தெரிவித்தவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சி தான் நாட்டின் உண்மையான வளர்ச்சி.

இவ்வாறு இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.