சந்திரயான்-3 திட்டப் பணிகள் ஓராண்டில் முடியும்! சிவன் தகவல்

சென்னை:

ந்திரயான்-3 திட்டப் பணிகள் ஓராண்டுக்குள் முடிவடையும் என்று  இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கல்லூரி ஒன்றில் விண்வெளி, பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் சமீபத்திய மேம்பாடுகள்’ எ என்ற தலைப்பில் 2 நாள் தேசிய மாநாடு நடைபெறுகிறது.  இந்த மாநாட்டை கவர்னர் பன்வாரிலால் தொடங் கவைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவர் சிவன்பிள்ளை கலந்துகொண்டார்..

அப்போது,  ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வெற்றிகரமாக நிலைநிறுத்தி சாதனை படைத்தது இந்தியா என்றும், அதுபோல, முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் அனுப்பியது, சந்திரயான் திட்டம் என பல்வேறு சாதனைகளை இஸ்ரோ செய்து வருவதாக பெருமிதம் கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில்,  விண்வெளி அறிவியல், பாதுகாப்பு ஆராய்ச்சி, பொறியியல் உட்பட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்ட விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் என 13 பேருக்கு கவுரவ விருதுகள் வழங்கப்பட்டன.  இஸ்ரோ தலைவர் கே.சிவனுக்கு விண்வெளி அறிவியல் துறையில் சிறந்த தலைமைக்கான விருதும், நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும்,வழங்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிவன், இந்த ஆண்டுஇறுதியில் ஆளில்லா விண்கலம் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு, பத்திரமாக தரையிறக்கப்படும் என்று கூறியவர், விண்ணுக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் தற்போது ரஷியாவில் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்றும்  தெரிவித்தார்.

செய்தியாளர்களின் சந்திரயான்3 திட்ட கேள்விக்கு,  இந்த திட்டம் ஓராண்டுக்குள் முடிக்கப்படும், அதற்கான ஏற்பாடுகளும், பணிகளும் நடைபெற்று வருகின்றன என்று கூறினார்.