ஸ்ரீஹரிகோட்டா:

நிலவை ஆராய்ச்சி செய்ய இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ  சந்திரயான்1, சந்திரயான்2 என இரு விண்கலங்களை அனுப்பி ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தை அடுத்த ஆண்டு இறுதியில் அனுப்ப இஸ்ரோ தயாராகி வருகிறது.

2020 நவம்பரில் சந்திராயன்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்ப இஸ்ரோ விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இஸ்ரோவில் இருந்து கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான்-1 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது. அந்த விண்கலம் நிலவிலுள்ள சூழல்கள், கனிமங்கள் குறித்து ஆய்வு செய்தது. தனது பணியை முழுமையாக செய்துள்ள நிலையில், 2009ம் ஆண்டு தனது ஆயுட்காலத்தை நிறைவு செய்தது.

அதைத்தொடர்ந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை, இஸ்ரோ அனுப்பியது. ஆனால், நிலவில் இருந்து 2.1 கிமீ. தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்தபோது, அதனுடன் இருந்த தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதிலிருந்து பிரிந்த ஆர்பிட்டர் தொடர்ந்து நிலவைச் சுற்றிவந்து நல்ல முறையில் ஆய்வை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சந்திராயன் 3 திட்டம் குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுக் கூட்டங்களை நடத்தினர். அப்போது, சந்திரயான்-3 மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.