திருச்சி,

திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சந்திராயன் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரலில் சந்திராயன்-2 ஏவுகணை ஏவ திட்டமிட்டப்பட்டிருப்பதாக கூறினார்.

திருச்சி மாநகராட்சி சார்பில் நடைபெற்ற அரசு விழாவில், இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்த தூய்மை திருச்சி பாடலை மயில்சாமி அண்ணாதுரை வெளியிட்டார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மயில்சாமி அண்ணாதுரை, நடப்பாண்டில் இந்தியா 12 செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியுள்ளதாக கூறினார்.

வரும்  2018-ஆம் ஆண்டு அரசின் சார்பில் 12 செயற்கைக்கோள்களையும், தனியார் பங்களிப்போடு 6 செயற்கைக்கோள்களையும் அனுப்ப திட்டமிடப்படப் பட்டுள்ளது என்றும்,

2018-ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் சந்திரயான் – 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக மயில்சாமி கூறினார்.

இந்த சந்திரயான்- 2 ஏவுகணையானது  நிலவில் மூன்று கட்டப் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என்றும், நிலவின் துருவ வட்டப்பாதையில் மண்ணை எடுத்து, அங்கேயே வைத்து ஆராய்ச்சி செய்யும் வகையில் சந்திராயன் 2 விண்கலம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.