சந்திராயன்-2 திட்டமிட்டபடி வரும் 15ந்தேதி அதிகாலை விண்ணில் பாய்கிறது! இஸ்ரோ

--

ஸ்ரீஹரிகோட்டா:

சந்திராயன்-2 விண்கலம் திட்டமிட்டபடி வரும் 15ந்தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்து உள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறி உள்ளது.

முதன்முறையாக இந்த விண்கலம் செலுத்தப்படுவதை பொதுமக்கள் பார்வையிடும் வகையில், அதற்கான ஆன்லைன் மூலம் பதிவு செய்தவர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டு உள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக ஏற்கனவே இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சந்திராயன்1 விண்கலத்தை  கடந்த 2008ம் ஆண்டு செலுத்தி ஆய்வு செய்தது. அதில், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்த தகவல்கள் கிடைத்தன. இந்த நிலையில், அதன் மேம்பட்ட தயாரிப்பான சந்திராயன்-2 விண்கலத்தை மீண்டும் நிலவுக்கு செலுத்த உள்ளது.

3.8 டன் எடை கொண்ட சந்திராயன் 2  விண்கலம், பிஎஸ்எல்வி மார்க்3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது.  இந்த விண்கலத்தில் 13 வகையான அறிவியல் ஆய்வு கருவிகள் பொருத்தப் பட்டு இருப்பதாகவும், திட்டமிட்டபடி வரும் 15ந்தேதி அதிகாலை 2.51 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்றும், வரும் செப்டம்பர் மாதம் 6ம் தேதி நிலவில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ அறிவித்து உள்ளது.

சந்திராயன்-2 விண்கலம் நிலவில் தரை இறங்கி ஆராய்ச்சி மேற் கொள்ளும் வகையில் ரோவர் இயந்திரத்துடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. வருகிற 15ஆம் தேதி அதிகாலை 2.51 மணி அளவில் விண்ணில் ஏவப்படுகிறது. இந்த விண்கலமானது,  நிலவின் தென் பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தலைவர் ஏற்கனவே தெரிவித்து உள்ளார்.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டு அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.

சந்திரயான் 2 விண்ணில் ஏவப்படுவதை அங்குள்ள கேலரியில் இருந்த படி நேரில் பார்ப்பதற்கு முன்பதிவி செய்துள்ள பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.