சந்திராயன் 2 ஜூலை இறுதியில் ஏவப்படும் : இஸ்ரோ விஞ்ஞானி

 

ஸ்ரீஹரிகோட்டா

ந்திராயன் 2 இந்த மாத இறுதியில் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திராயன் 2 விண்கலம் இன்று அதிகாலை 2.51 க்கு ஏவப்படுவதாக இருந்தது.  இதற்கான கவுண்ட் டவுன் நேற்று காலை 6.15 மணிக்கு தொடங்கியது.  இதை நேரில் காண ஜனாதிபதி, ஆந்திர முதல்வர், ஆந்திர ஆளுநர் உள்ளிட்ட பலரும் வருவதாக இருந்தனர்.  இந்த விண்கலத்தை ஜி எஸ் எல் வி மார்க் 3 என்னும் ராக்கெட் விண்ணில் செலுத்த தயாராக இருந்தது.

ஆனால் இந்த ராக்கெட் மற்றும் விண்கலத்தில் சில தொழில்நுட்ப பிரச்னை ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டதால் விண்ணில் ஏவப்படுவது நிறுத்தப்பட்டது.  இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானி ஒருவர், “ஒரு சிறு தொழில்நுட்ப பிரச்னை காரணமாக சந்திராயன் 2 ஏவுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.   விண்கலத்தை ஏவுவதற்கு முன்பே இது கண்டுபிடிக்கப்பட்டது அதிருஷ்டவசமானது.

இது குறித்து நாங்கள் ஆய்வு செய்து வருகிறோம்.  இந்த பிரச்னை விரைவில் சரி செய்யப்படும்.   இந்த ராக்கெட்டை  பிரித்து ஆய்வு நடத்தப்படுகிறது.   இந்த மாத இறுதியில் அதாவது 29 அல்லது 30 ஆம் தேதிக்குள் மீண்டும் சந்திராயன் ஏவப்படலாம் என திட்டமிடப்பட்டுள்ளது.  அதற்குள் பழுது சரி செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி