​ மோடிக்கு  உம்மன்சாண்டி  கண்டன கடிதம்

chandy_0

திருவனந்தபுரத்தில் கடந்த ஞாயிற்றுகிழமை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, கேரளாவை சோமாலியாவுடன் ஒப்பிட்டு அம் மாநில காங்கிரஸ் ஆட்சியை  மிகவும் கடுமையாக விமர்சித்தார்.  அங்கு அரசியல் வன்முறைகளும் கொலைகளும் பெருகிவிட்டன என்றும்  குற்றம்சாட்டினார்.

இதைத் தொடர்ந்து  மோடிக்கு கண்டனம் தெரிவித்து கேரள முதல்வர் உம்மன்சாண்டி கடிதம் எழுதி இருக்கிறார்.

அதில், “கேரளா மாநில மக்களின் மனதை புண்படுத்தும் விதமாக மோடி பேசியுள்ளார்.  அதாரம் இல்லாத இந்த பேச்சை மோடி திரும்ப பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மோடியின் பேச்சுக்கு சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனம்  எழுந்துள்ளது.

 

கார்ட்டூன் கேலரி