‘மாற்றம்’: சூட்கேஸ் மணியாக மாறிய அன்புமணி! ஸ்டாலின்

சென்னை: 

மிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக கூறிய அன்புமணி தற்போது ஏமாற்றம் அடைந்து சூட்கேஸ் மணியாக மாறி உள்ளார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

திமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் இல்ல திருமண விழா திருவேற்காட்டில் இன் றுநடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திருமணத்தை நடத்தி வைத்த்து  மணமக்களை வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து பேசியவர்,  சுதர்சனம் மாம்பழத் தொழில் செய்து வருகிறார், ஆனால் சிலர் மாம்பழ சின்னத்தை வைத்துக்கொண்டு எப்படியோ வருமானம் ஈட்டுகின்றனர் என்றுபாமகவை சாடினார்.

தற்போது நாடாளுமன்ற தேர்தல் காரணமாக கட்சிகள் கூட்டணிகள் பேசி வருகின்றன.  திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று பல ஆண்டுகளாக கூறிவந்த ராமதாஸ்  தற்போது திடீரென அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறார். அப்படியானார், அந்த கட்சி  திராவிட இயக்கத்தை சேர்ந்தது இல்லை என்பதை நிரூபித்திருத்துள்ளார்.

தற்போது ஏற்பட்டுள்ள அதிமுக-பாமக கூட்டணி, மக்கள் விரோத கூட்டணி, பண நலனுக்கான கூட்டணி என்று கூறிய ஸ்டாலின், மாற்றம் முன்னேற்றம் என்று கூறி வந்தவர்கள், இனிமேல் மாற்றம் ஏமாற்றம் என்றும், அன்புமணி சூட்கேஸ் மணி என்றுதான் கூறிக்கொள்ள வேண்டும் என்றும் சாடினார்.