மது உடல் நலத்திற்கு மட்டுமா கேடு – மாற்றம் பெறும் விழிப்புணர்வு வாசகம்

சென்னை:

து அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் அந்த நபரைக் கைதுசெய்து அவரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்துசெய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், அதனைக் கண்காணிக்க தனிப்படை அமைக்கவும் யோசனை கூறியுள்ளது.

இந்நிலையில் மது – நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு என மதுபாட்டில் மீது பொறிக்கப்பட்டிருக்கும் விழிப்புணர்வு வாசகம் மாற்றப்படும் எனும் அறிவிப்பு பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

இதுகுறித்து ’தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின்’ செய்திக் குறிப்பில், மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு, பாதுகாப்பாக இருப்பீர் என புதிய விழிப்புணர்வு வாசகம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அளவில், புள்ளியியல் ஆய்வுத் துறையால் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், மதுவால் அதிக வருவாய் ஈட்டும் மாநிலத்தில் தமிழ்நாடு  முதலிடம் பெற்றுள்ளது. அதனால் விழிப்புணர்வு வாசகத்தை மாற்றுவது அரசுக்கு பொருத்தமாகத்தான் இருக்கிறது என சமூகவலை தளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். மது அருந்துவது உடல் நலத்திற்கு மட்டுமா கேடு?…….