முஸ்லிம் சட்டத்தில் திருத்தம்….அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்

--

டெல்லி:

இஸ்லாமிய சட்டத்தில் பெண்களுக்கான சுதந்திரத்தில் சம உரிமை வழங்காதது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சஹாரா கல்யாண் சமிதி சார்பில் முஸ்லிம் பெண்களுக்கு சுதந்திர சட்டத்தில் சம உரிமை வழங்குதல் தொடர்பான பொது நல வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வக்கீல்கள் ராகவ் அவஸ்தி மற்றும் சவுமந்து முகர்ஜி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

மனுவில்,‘‘ முஸ்லிம் சட்டத்தில் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்களுக்கு பாரபட்சமான முறையில் உரிமைகள் வழங்கப்ப டுகிறது. இது நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு எதிரான சட்டமாகும். அடிப்படை உரிமை மறுக்கப்படுவதாகும். இந்த பாரபட்சமான செயல் வழக்க நடைமுறை சட்டத்தின்படி வழங்கப்படுகிறது. இந்த தனிப்பட்ட சட்டம் நீதித்துறைக்கு எதிரான நடைமுறையாகும்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த மனுவில், ‘‘முஸ்லிம் சட்டப்படி கணவரது இறப்புக்கு பிறகு அவரது சொத்தில் 8ல் ஒரு பங்கு குழந்தைகள் இரு க்கும் மனைவிக்கு சேர வேண்டும். குழந்தை இல்லாத பட்சத்தில் 4ல் ஒரு பங்கு வழங்க வேண்டும். மகனுக்கு வழங்கப்படும் சொத்துக்களில் 50 சதவீதத்தை மட்டுமே மகள் பெற முடியும்.

இதே மனைவி இறந்தால் அவரது சொத்துக்களில் 4ல் ஒரு பங்கு குழந்தைகள் இருக்கும் கணவருக்கு சேர வேண்டும். குழந்தைகள் இல்லை என்றால் 50 சதவீத சொத்துக்கள் கணவரை சேர வேண்டும். மகளை விட இரு மடங்கு சொத்துக்களை மகன் பெற முடியும்.

இதன் மூலம் மனைவியோ அல்லது மகளோ ஆண்களுக்கு கொடுக்கப்படும் சொத்துக்களில் 50 சதவீதம் மட்டுமே பெற இ ச்சட்டத்தில் வழிவகை உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்படுவதில்லை. அதனால் முஸ்லிம் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்’’ என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரோஹினி மற்றும் சங்கீத தின்க்ரா சேகன் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இது குறித்து வரும் 15ம் தேதிக்குள் விளக்கமளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.