புதுமுக இயக்குநர் அன்பரசன் இயக்கத்தில் சிபிராஜ், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துவரும் படம் ‘வால்டர்’.

11:11 புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இதன் படப்பிடிப்பு, கடந்த ஜூன் 14-ம் தேதி தொடங்கப்பட்டது.

முழுக்க முழுக்க காவல்துறையை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, சனம் ஷெட்டி, சார்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இறுதிக்கட்டப் பணிகள் முடிந்து படத்தை தணிக்கைக்கு அனுப்பியது படக்குழு. தணிக்கை அதிகாரிகள் யு சான்றிதழ் அளித்தனர்.

இந்த வாரத்தில் ‘ஜிப்ஸி’, ‘பொன் மாணிக்கவேல்’, ‘வெல்வெட் நகரம்’ உள்ளிட்ட படங்கள் வெளியாவதால் வால்டர் படத்தின் ரிலீஸ் தேதி மார்ச் 6-மாற்றப்பட்டது. அதன்படி, மார்ச் 13-ம் தேதி வால்டர் ரிலீஸ் ஆகிறது.