பழம்பெரும் நடிகை பானுமதி வாழ்க்கை வரலாற்றை ஹைதராபாத்தை சேர்ந்த நார்த்ஸ்டார் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிப்பு நிறுவனம் ” பானுமதி ராமகிருஷ்ணா” என்ற தலைப்பில் படம் தயாரித்துள்ளது.
இப்படம் வரும் வெள்ளியன்று இணையதளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது .
இந்நிலையில் இப்படம் தனது தாய் நடிகை பானுமதியை களங்கப்படுத்த எடுக்கப்பட்டுள்ளது , படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என பானுமதியின் மகன் டாக்டர் பரணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் ஒரு கோடியே ரூபாயை இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் தாயாரின் வாழ்க்கையை தழுவிய கதையல்ல என்று வாதிடப்பட்டது.
அதனால் படத்தின் பெயரை வேண்டுமானால் “பானுமதி மற்றும் ராமகிருஷ்ணா” என மாற்றி வெளியிடுவதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை மனுதாரர் தரப்பும் ஏற்றுக் கொண்டதை அடுத்து, வழக்கை நீதிபதி சதீஷ்குமார், முடித்துவைத்து உத்தரவிட்டார்.