மதுரை:

மிழகத்தில் ஏப்ரல் 18ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தித்துள்ள நிலையில், தமிழக டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் செயல்பட தடை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக டிஜிபியாக இருந்து வரும் டி.கே.ராஜேந்திரன் மீது, குட்கா ஊழல் உள்பட பல்வேறு குற்றச் சாட்டுக்கள் உள்ள நிலையிலும் அவர் டிஜிபியாகவே தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில்,   மதுரையை சேர்ந்த வழக்கறிஞர்,  கதிரேசன் என்பவர் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில், டிஜிபிக்கு எதிராக முறையீடு செய்துள்ளார்.  அவர் தாக்கல் செய்துள்ள முறையீட்டு மனுவில், டிஜிபி ராஜேந்திரன் ஏற்கனவே குட்கா முறைகேடு புகாரில்  சிக்கி இருப்பதால், தேர்தல் நேரத்தில் அவர் மத்திய, மாநில அரசுகளுக்கு சாதகமாக செயல்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம், எனவே வேறு ஒரு நியாயமான அதிகாரியை டிஜிபியாக நியமிக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இந்த முறையீட்டை, மனுவாக தாக்கல் செய்தால் விசாரணை செய்யப்படும் என மதுரை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.