முதல் டெஸ்டே பகலிரவு போட்டி – இந்திய vs ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மாற்றம்!

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய அணி பங்கேற்கும் டெஸ்ட் தொடரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தாண்டு இறுதியில், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் செய்யும் இந்திய அணி, 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட நீண்ட தொடரில் பங்கேற்கவுள்ளது. இத்தொடர் சுமார் 2 மாதங்களுக்கு மேல் நீடிக்கும்.

இந்த நீண்ட தொடரில் பங்கேற்பதற்காக, இந்திய அணியினர், ஐபிஎல் தொடர் முடிந்தவுடன், அமீரகத்திலிருந்து இந்தியா வராமல், நேரடியாக ஆஸ்திரேலியா செல்கின்றனர்.

டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரை, முதல் போட்டி, டிசம்பர் 3ம் தேதி பிரிஸ்பேனில் துவங்கும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது முதல் போட்டியே அடிலெய்டில் பகலிரவுப் போட்டியாக நடைபெறவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.