மத்திய அமைச்சர் பொன்.ரா. மீது செருப்பு வீச்சு!

சேலம்,

நேற்று முன்தினம் டில்லியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் தமிழகத்தை சேர்ந்த ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் உடல் அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சாமிநாதபுரத்துக்கு வந்தடைந்தது.

அதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, தமிழக அரசு அறிவித்த நிதியையும் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.

அதைத்தொடர்ந்து அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அவருடன் படித்த மாணவர்கள், பொதுமக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முத்துகிருஷ்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த அவரது சொந்த ஊருக்கு வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களும், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள்  எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அப்போது மாணவர் ஒருவர் அவர்மீது செருப்பை வீசி தனது எதிர்ப்பை தெரிவித்தார். அவர் வீசிய மைக் பொன்.ரா முன்பு வைக்கப்பட்டிருந்த மைக் பட்டு விழுந்தது.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் செருப்பு வீசிய மாணவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

அதைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முத்துக்கிருஷ்ணனின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து பேசினார். அப்போது,. மாணவர் முத்துக்கிருஷ்ணனின் மரணம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்

செருப்பு வீச்சு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அரசியல் கட்சியினர்தான் இதற்கு காரணம் என பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.

செருப்பை வீசியவர் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.