*பெருமாளின் குணங்கள்*

பெருமாளின் குணங்கள் பற்றிய JSK ஆன்மீகம்- அறிவுரை-இந்துமதம் முகநூல் பக்கப் பதிவு

1. *செளசீல்யம்*
பெரியவர். . . . சிறியவர் என்ற பேத உணர்வு இல்லாமல். . . . அடியவர்களுடன் சேர்ந்திருக்கும் மேன்மையான குணம். . . .

2. *வாத்ஸல்யம்*
குற்றம், குறைகளுடன் தம் அடியார்கள் இருந்த போதிலும். . . . அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது. . . . அப்போதுதான். . . . பிறந்த கன்றை. . . . . தாய்ப் பசு அருவருப்பு இல்லாமல் அதன் வழுவை ஆசையுடனும். . . . பாசத்துடனும் நக்கிக் கொடுக்கும். . . . . அதைப் போன்ற அன்பையும். . . . பாசத்தையும் பொழிபவர். . . . பகவான். . . *

3. *மார்தவம்*
அடியவர்கள் தம்மைப் பிரிந்து செல்வதை பொறுத்துக் கொள்ள முடியாதவன். . . . .

4. *ஆர்ஜவம்*
உடல். . . . உள்ளம். . . . வாக்கு ஆகியவற்றில் மாசு இல்லாத குணம் கொண்டவன். . . .

5. *செளஹார்த்தம்*
எப்போதும் எல்லோர்க்கும் நன்மையே எண்ணும் பரந்த குணம். . . .

6. *ஸாம்யம்*
ஜாதி. . . . குணம் ஆகியவற்றில் உயர்வு தாழ்வு கருதாமல். . . யாராக இருந்தாலும் தம்மைச் சரணாகதி என்று தஞ்சம் அடைந்தால் ஏற்றுக் கொள்ளும் குணம். . . .

7. *காருண்யம்*
துன்பப்படுபவர்களை பார்த்து. . . . இப்படிக் கஷ்டப்படுகிறார்களே என்று இரங்கும் குணம். . .

8. *மாதுர்யம்*
எதிரியின் மறுபக்கச் சிறப்பையும் மதித்துப் போற்றி . . . . பகைவனுக்கும் இனியவனாக இருக்கும் குணம். . . .

9. *காம்பீர்யம்*
தம்மைச் சரண் அடையும் அடியார்களுக்கு. . . . மற்றவர்களால் நினைத்துப் பார்க்காத முடியாதபடி. . . . தன்னடக்கம் காட்டி . . . எதிர்பாராத வகையில் அருள் புரியும் மகோன்னத குணம். . . .

10. *ஒளதார்யம்*
பிரதிபலனாக எதையும் எதிர்பார்க்காமலும். . . . கொள்ளக் கொள்ளக் குறையாமலும். . . . அடியார்கள் வேண்டியவற்றைத் தருகின்ற குணம். . . . .

11. *சாதுர்யம்*
பகைவரையும் நண்பராக்கிக் கொள்ளும் சாமர்த்தியம். . . .

12. *ஸ்தைர்யம்*
அடியார்களை எந்த நிலையிலும் கைவிடாத உறுதி. . . .

13. *தைரியம்*
பகைவர்கள் எத்தனை வலிமை கொண்டவர்களாக இருப்பினும். . . அவர்களை அழிக்கின்ற வல்லமை. . .

14. *ஷெளர்யம்*
பகைவர்கள் வலிமையுடன் இருப்பதாக அறிந்தும் கூட அதற்குக் கலங்காமல். . . . மற்றொரு துணை சேர்த்துக் கொள்ளாமல். . . தனி ஒருவராக அவர்கள் நடுவே புகுந்து வரும் குணம் . . . . .

15. *பராக்கிரமம்*
போர்க்களத்தில் பயமோ. . . . கோபமோ கொள்ளாமல் விளையாட்டாகவே பகைவர்களை அழிக்கும் ஆற்றல். . . .

16. *சத்யகாமம்*
பேராசை ஏதும் இன்றி. . . . அத்தனை பேறுகளையும் சுய முயற்சியால் குறைவில்லாமல் பெற்று நிறைவாக இருக்கும் குணம். . . .

17. *சத்யசங்கல்பம்*
எதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும். . . . அதைத் தடையின்றி செய்து முடிக்கும் குணம். . . .

18. *க்ருதித்வம்*
அடியவர்களின் நன்மைக்காக இடைவிடாமல் உழைத்துக் கொண்டே இருப்பது. . . .

19. *க்ருதக்ஞத்வம்*
அடியார்களின் சிறு கைங்கர்யத்தையும் கண்டு மகிழ்வது. . . . அதையும் என்றும் நினைவில் கொள்வது.