பெரா வழக்கில் டிடிவி மீது குற்றச்சாட்டு பதிவு!

சென்னை,

பெரா வழக்கில் டிடிவி தினகரன் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து வழக்கு விசாரணை 22ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

டிடிவி தினகரன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது டிடிவி தினகரன்  டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இதன் காரணமாக ஆஜராகவில்லை என்று  கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து இன்றைய (8ந்தேதி) விசாரணைக்கு அவரை ஆஜர்படுத்த கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

அதையடுத்து, தற்போது  ஜாமினில் வெளிவந்துள்ள தினகரன் எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கோர்ட்டில் அவர் மீது குற்றச்சாட்டு பதிவி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து  வழக்கை 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது உத்தரவிட்டார் செ ன்னை பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மலர்விழி.