புதுடெல்லி:

இந்தியாவில் பல்வேறு தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபலா-ஐ-இன்ஸானியத் இயக்கத்துக்கு எதிராக தேசிய விசாரணை ஏஜென்ஸி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள ஃபலா-ஐ-இன்ஸானியத் இயக்கத்துக்கு சொந்தமான மருத்துவமனை.

லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னணி இயக்கமான ஃபலா-ஐ- இன்ஸானியத். ஹரியானா மற்றும் டெல்லியில் ஸ்லீப்பர் செல்லாக செயல்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

இந்த குற்றப்பத்திரிகையில் லஷ்கர் இ தொய்பா நிறுவனர் ஹஃபீஸ் சயீத் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக இந்தியா குற்றஞ்சாட்டி வரும் நிலையில், தேசிய விசாரணை ஏஜென்ஸி குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

டெல்லியைச் சேர்ந்த முகமது சலாம், நாக்பூரைச் சேர்ந்த முகமது சலீம், பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது கம்ரான் ஆகியோர் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

ஃபலா-ஐ-இன்ஸானியத் ஃபவுண்டேஷன் தலைவர் ஹபீஸ் முகமது சயீ மற்றும் துணை தலைவர் ஷாஹீத் மஹமூத் ஆகியோர், புதுடெல்லி மற்றும் ஹரியானாவில் ஸ்லீப்பர் செல்களை கடந்த 2012-ம் ஆண்டு உருவாக்கி சதித் திட்டம் தீட்டியதாக குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.