ஸ்லாமாபாத்

னாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரிஃப் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது.

பனாமா பேப்பர்ஸ் என்ற தலைப்பில் உலகில் உள்ள பலதலைவர்கள் மீது ஊழல் செய்து சொத்து குவித்த விவரங்கள் வெளியாகின.   அதில் இடம் பெற்ற பல தலைவர்களில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பெயர்களும் இருந்தன.   இதையொட்டி பாக் உச்சநீதிமன்றம் நவாஸ் ஷெரிஃபை பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து ஆணையிட்டது.  நவாஸ்,  அவர் மகன்கள் ஹுசைன், ஹசன், மகள் மரியம், மருமகன் முகமது சஃப்தார் ஆகியோர் மீது வழக்குப் பதியவும் ஆணையிட்டது.

நேற்று பாகிஸ்தான் தேசிய பொறுப்புடமை நீதிமன்றம் நவாஸ் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் 3 ஊழல் வழக்குகளுக்கான குற்றச்சாட்டை பதிவு செய்தது.   குற்றச்சாட்டு பதிவு செய்வதை ஒத்தி வைக்க வேண்டும் என சஃப்தார் கோரி இருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  நவாஸ் சார்பில் இதே காரணத்துக்காக போடப்பட்ட மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.