சாருஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியாகி அனைவராலும் பாராட்டப் பட்ட படம் தாதா 87. இப்படத்திற்கு விஜய் ஸ்ரீ கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருந்தார். லோக்கல் தாதாவாக களம் இறங்கி தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் தேசிய விருது பெற்ற நடிகர் என தடம் பதித்தார் சாருஹாசன்.

சத்ரியனாக இருப்பது மட்டும் முக்கிய மல்ல சாணக்கியனாகவும் இருக்க வேண்டும்‌ என்ற கருத்தை முன்வைத்து சாருஹாசனை மீண்டும் இயக்குகிறார் விஜய் ஸ்ரீ ஜி. உள்ளூரில் சாமான்யனாக தாதாவாக இருக்கும் ஒருவர் தன் புத்தியின் பலத்தை கொண்டு உலக அரங்கில் தவிர்க்க முடியாத இடத்தை எவ்வாறு பிடித்து முதன்மை இடத்தை அடைகிறார் என்ற பின்னணியில் இப்படம் உருவாகிறது.
முன்னணி நடிகர், நடிகையினர் மற்றும் மக்கள் மனதில் இடம்பெற்ற பழம் பெரும் நடிகர், நடிகையினர் அனை வரும் ரசிக்கும் வண்ணம் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.
லாக்டவுன் நேரத்திற்கு முன் தாதா 87- 2.0 படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு 7 நாட்கள் நடைபெற்றது. சாருஹாசன், முக்கிய வேடத்தில் மைம் கோபி மற்றும் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த பலர் நடித்த முக்கிய காட்சிகள் படமாக் கப்பட்டது. லாக்டவுன் தடை நீக்கத் திற்கு பின் அரசின் கட்டுப்பாட்டுக ளோடு தேவையான படக்குழுவின ரோடு சென்னை, கேரளா மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
தாதா 87, பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்திற்கு பின் இசையமைப்பா ளர் லியாண்டர் லீ மார்ட்டி மூன்றாம் முறையாக மீண்டும் விஜய் ஸ்ரீ ஜியுடன் இப்படத்தில் இணைகிறார். ஒளிப்ப திவை கோபி கவனிக்கிறார். விரைவில் இப்படத்தின் டீசர் வெளிவரவுள்ளது.