வரலட்சுமி சரத்குமாரின் `சேஸிங்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்….!

வீரக்குமார் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி கொண்டிருக்கும் படத்தில் வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு தஷி இசையமைக்கிறார்.

கிருஷ்ணசாமி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் நடைப்பெற்றுவருகிறது .

இந்நிலையில் இப்படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் வரலட்சுமி சரத்குமார், இரு சக்கர வாகனத்தை இயக்குவது போன்ற காட்சி இடம்பிடித்துள்ளது.

தமிழில் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வந்த வரலட்சுமி சரத்குமார், கன்னடத்தில் ரணம் படத்தில் நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

கார்ட்டூன் கேலரி