வரலக்ஷ்மி நடிப்பில் உருவாகியிருந்த படம் சேஸிங். இந்த படத்தை வீரகுமார் இயக்குகிறார். மதியழகன் முனியாண்டி தயாரிக்கிறார். தசி இசையமைக்கும் இந்த படத்திற்கு பொன் பார்த்திபன் வசனம் எழுதியுள்ளார். கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாலா சரவணன் மற்றும் இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் ஏதும் இல்லாமல் வரலக்ஷ்மியே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் நிமிர்ந்து நில் எனும் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. காவல் அதிகாரியாக மிரட்டியுள்ளார் வரலக்ஷ்மி. கல்பனா பாடிய இந்த பாடல் வரிகளை முத்துலிங்கம் எழுதியுள்ளார்.

https://youtu.be/CVQe2UFbTVk