அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற முதல்வர் மருமகள்!

ராய்ப்பூர்

ட்டிஸ்கர் முதல்வர் மருமகள் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுள்ளார்.

சட்டிஸ்கர் மாநிலத்தின் முதல்வர் ரமன் சிங்.   இவருடைய மகன் அபிஷேக் சிங்  ராஜ்னந்த் தொகுதியில் உறுப்பினராக உள்ளார்.  அபிஷேக் சிங் தனது மனைவி ஐஸ்வர்யா சிங் கை பிரசவத்துக்காக ராய்ப்புரில் உள்ள அரசு அம்பேத்கர் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அனுமதித்தார்.    அவரை மருத்துவர் அபா சிங் கவனித்துவந்தார்.

ஐஸ்வர்யா சிங்குக்கு நேற்று ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.   காலை 9 மணிக்குப் பிறந்த இந்தக் குழந்தை 3 கிலோ எடையுடன் உள்ளது.  தாயும் சேயும் தற்போது நலமாக உள்ளனர்.   குழந்தையை முதல்வர் ரமன் சிங் மற்றும் பலர் மருத்துவமனையில் வந்து பார்த்தனர்.

நாட்டில் பலரும் மருத்துவ சேவைக்கு தனியார் மருத்துவமனைகளையே விரும்பும் இந்த நேரத்தில் முதல்வரின் குடும்பத்துக் குழந்தை ஒரு அரசு மருத்துவமனையில் பிறந்துள்ள தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.   மக்களில் பலர் இந்த நிகழ்வை புகழ்ந்து வருகின்றனர்.