ராய்ப்பூர்

னதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான அஜித் ஜோகி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர் குழு அறிவித்துள்ளது.

கடந்த 1946 ஆம் வருடம் பிலாஸ்பூரில்  பிறந்த அஜித் ஜோதி போபால் ஐஐடியில் கல்வி பயின்றவர் ஆவார்.  அந்த பிறகு ஐ ஏ எஸ் தேர்ச்சி பெற்றும் இந்தூரில் 1981 முதல் 1985 வரை மாவட்ட ஆட்சியராகப் பணி புரிந்தார்.  காங்கிரஸ் கட்சியின் கொள்கையில் ஈடுபாடு கொண்ட அவர் அதன்பிறகு அக்கட்சியில் இணைந்தர். இருமுறை இவர் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டு வரை அஜித் ஜோகி சத்தீஸ்கர் மாநில முதல்வராக இருந்தார்.  கடந்த 2016 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் மனக்கசப்பு ஏற்பட்டு அவர் ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியைத் தொடங்கினார்.   தற்போது நடந்த தேர்தலில் மார்வாகி தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

நேற்று பிற்பகல் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததால் ராய்ப்பூர் ஸ்ரீ நாராயணா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  தற்போது அவர் கோமா நிலைக்குச் சென்று விட்டதாகவும் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்த மருத்துவர் குழு இன்னும் 48 மணி நேரத்தில் அவர் உடல் மருந்துகளுக்கு அளிக்கும் ஒத்துழைப்பைப் பொறுத்தே எதையும் தெரிவிக்க முடியும் எனக் கூறி உள்ளனர்.