ஆப்பிளின் சிறிய, மலிவான ஐபோன் – திங்கட்கிழமை அறிமுகம்

ஆப்பிள்

சான் பிரான்சிஸ்கோ: –

அமெரிக்க அரசுடன் ஐ-போனின் பாதுகாப்பு வசதி குறித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சிறிய மற்றும் மலிவான 4 அங்குல ஐ-போன் SE  உட்பட பல புதிய அலைப்பேசிகளை ஆப்பிள் நிறுவனம் திங்கட்கிழமை முதல் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த ஐ-போன் 5-எஸ் வரிசை அலைப்பேசிக்கு மாற்றாகவும், 6-எஸ் ஐ-போனின் வசதிகளையும் கொண்டு வெளிவரும் என வெளிவந்துள்ள புகைப்படத்தில் இருந்து தெரியவருகின்றது.

Apple-1

இந்திய  ஸ்மார்ட்போன் பயனர் எண்ணீக்கை அமெரிக்க ஸ்மார்ட்போன் பயனர் எண்ன்ணிக்கையை இன்னும் இரண்டாண்டுகளில் கடந்துவிடும் ஆகையால், ஒரு பெரிய ஸ்மார்ட்போன் அடித்தளம் மற்றும் 160 மில்லியன்  பயனர்  உள்ள  இந்தியச் சந்தையை குறிவைத்து  இந்த சிறிய மற்றும் மலிவான 4 அங்குல ஐ-போன் SE , சிலிகான்வெலி, கலிபோர்னியாவில் உள்ள குபர்டினொ தலைமையகத்தில் பெரும் மக்கள் திரள் முன் வருகின்ற திங்கட்கிழமை அறிமுகப்படுத்தப் படுகின்றது.

செய்தி ஊடகத் தகவல்களின்படி, ஆப்பிள் அகற்றக்கூடிய விசைப்பலகை மற்றும் ஸ்டைலஸ் போன்ற அம்சங்களை உடைய, வணிக பயன்பாட்டிற்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு புதிய ஐபாட்-புரோ(iPod-Pro) அலைப்பேசியை அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.

ஆப்பிள் நிறுவனம் “மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கால அட்டவணைகள் தயாரிப்பு நிகழ்வுகள் செய்வது வாடிக்கை.  எனவே ஒரு நீதிமன்றத்தின் வழக்கு தேதியான திங்களன்று ஒரு புதிய தயாரிப்பை அரங்கேற்றம் செய்யும்  முடிவு தற்செயலானது உள்ளது,” யு.எஸ்.ஏ. டுடே அறிக்கை கூறியது.

மார்ச் 22 ம் தேதி கலிபோர்னியாவில் ஒரு பெடரல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் வழக்கில் தோன்றி தங்கள் நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறை (DOJ)  காழ்ப்புணர்ச்சியுடன்  தீவிரமாகவும் மற்றும் “ஆதாரமற்ற” குற்றச்சாடுகளை அடுக்கி நிர்மூலமாக்க முயற்சி செய்வதாக குற்றம் சாட்டி  ஆப்பிள் நிறுவனம் போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சான் பெர்நார்டினோ கொலையாளிகள் ஒருவரான  ரிஸ்வான் பாரூக் என்பவர் பயன்படுத்திய ஆப்பிள் ஐ-போனில் உள்ள தகவல்கள் தமக்கு வேண்டுமென ஆப்பிள் நிறுவனத்திடம் கோரி அமெரிக்க அரசாங்கம் போராடிவருகின்றது.

ஆப்பிள் நிறுவனம், அமெரிக்க அரசின் இந்த கோரிக்கை நிறுவனத்தின் உரிமைகளை மீறும் செயல் எனக் கூறி  தகவல் தர மறுக்கின்றது.

ஆப்பிள் வாதிடுகையில், அரசாங்கத்தின் இந்தக் கோரிக்கை அரசு மற்றும் தீயவர்களால் தவறாக பயன்படுத்த வழியேற்படுத்தி விடும் எனக் குறிப்பிட்டுள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டும் என்றால், ஆப்பிள் பல சிறப்பம்சங்களுடன் AMOLED திரையுள்ள, ஒரு 5.8-அங்குல ஐபோன் கொண்டு வருகிறது. அது 2018 அல்லது அதற்கு முன்னரெ 2017 இல் அறிமுகப்படுத்தப் படும் என்று தெரிகின்றது.

நடப்பு எல்சிடி திரை-யுடன் ஒப்பிடும்போது  அமோல் (ஆக்டிவ்-மேட்ரிக்ஸ் ஆர்கானிக் ஒளி உமிழும் டையோடு) எனும் AMOLED (Active-Matrix Organic Light-Emitting Diode)  காட்சித்திரை  மெல்லியது  மற்றும் மின்னாற்றல் காட்சித்திரையில் வண்ணங்கள் மற்றும் தெளிவு மிகவும் சிறப்பாக உள்ளது.

மோட்லெ ஃபூல் மேற்கோள் காட்டியுள்ள படி, டிஜிடைம்ஸ் வெளிவந்துள்ள ஒரு முன் வெளியீடு அறிக்கையின்படி  முதல் ஆண்டில் பல 50 மில்லியன் சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும்.

டிஜிடைம்ஸ் ஒரு சீனா சார்ந்த தினசரி செய்தித்தாள் மற்றும் மோட்லெ ஃபூல் அமெரிக்காவை மையமாகக் கொண்ட ஒரு மல்டிமீடியா நிதி-சேவை நிறுவனம் ஆகும்.

ஆப்பிள் இந்த ஆண்டு இரண்டு வகைகளில் அதன் பெரிய திரை ஐபோன் 7 பிளஸ் வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

ஒற்றை-லென்ஸ் கேமரா வுடனும் ஒரு இரட்டை லென்ஸ் கேமரா வுடனும் அரிமுகப்படுத்தப்படவுள்ளது.  இரட்டை லென்ஸ் காமிரா உள்ள போனை “ஐபோன் ப்ரோ”  என்கிறப் பெயரில் வெளியிட வுள்ளதாக செய்தி கசிந்துள்ளது.

திங்கட்கிழமை விற்பனைக்கு வரும் குறைந்தவிலை ஐ-போன் என்பது, ஆன்ராய்டு போனின் விற்பனையால் நடுத்தர வாடிக்கையாளர்களைக் கவரமுடியாமல் படுதோல்வியடைந்த ஆப்பிளின் இரண்டாவது பெரும் முயற்சி என்றும், அதிகச்சக்தியுள்ள A-9 சிப்பினை பயன்படுத்துமானால் இந்தப் போன் வயர்லெஸ் நெட்வொர்க்கில் சிறப்பாக செயல்பட்டு வாடிக்கையாளர்கலைக் கவரும், இல்லையேல் ஆன்ட்ராய்டிடம் மீண்டும் சரணடையும் என்கிறார் மூர் நுண்ணறிவு மற்றும் மூலோபாயம் நிறுவனத் தலைவர், பாட்ரிக்  மூர்.

கார்ட்டூன் கேலரி