ராஞ்சி

பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா மீது மக்களுக்கு ரூ. 15 ல்ட்சம் தருவதாகக் கூறி வாக்குறுதி அளித்து மோசடி செய்ததாக வழக்கு பதியப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் வருடம் மக்களவை தேர்தல் பிறசார்த்தின் போது பிரதமர் மோடி தாம் ஆட்சி அமைத்தால் வெளிநாடுகளில் உள்ள் கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வ்ரப்போவ்தாகவும் அதில் இருந்து இந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் அவ்ர்வ்ர் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் முதலீடு செய்வதாகவும் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

அதன் பிறகு மோடி பிரதமராக பொறுப்பு ஏற்றார்.   நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கிக் கணக்கு தொடங்கும் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.  எனவே மக்கள் தங்கள் கணக்குகளில் ரூ.15 லட்சம் வரும் என ஆவலுடன் எதிர்பார்த்தனர்.    ஆனால் அவ்வாறு நடக்கவில்லை.

ராஞ்சி உயர்நீதிமன்றத்தில் எச் சி சிங் என்னும் வழக்கறிஞர் வழக்கு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.  அதில் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் கடந்த 2014 ஆம் வருட  மக்களவை தேர்தலின் போது  ஒவ்வொரு இந்தியருக்கும் ரூ.15 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும் ஆனால் அவ்வாறு தராமல் மோசடி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை ராஞ்சி உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலெ ஆகியோர் மீது பொய் வாக்குறுதி அளித்து மக்களை ஏமாற்றுதல், மோசடி ஆகிய பிரிவின கீழ் வழக்கு பதிந்துள்ளது.

வழக்கறிஞர் எச் சி ஷா, “சென்ற 2019 ஆம் வருடம் நடந்த மக்களவை தேர்தலில் குடியுரிமை சட்டம் கொண்டு வரப்படும் என பாஜகவினர் வாக்குறுதி அளித்தனர்   அந்த வாக்குறுதியை தற்போது நிறைவேற்றி உள்ளனர்.  ஆனால் ரூ.15 லட்சம் தருவதாக அளித்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை?” எனக் கேள்விகள் கேட்டுள்ளார்.