டில்லி,

காசோலை மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முனாப் பட்டேலுக்கு டில்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியில் வேகப்பந்துவீச்சாளராக இருந்தவர் முனாப் பட்டேல். கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியவர்.

இவர் டில்லியில் உள்ள நிவாஷ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தின் பங்குதாரதாக உள்ளார். மேலும் இயக்குனராகவும் இருக்கிறார்.

இந்த நிறுவனம் சார்பாக டில்லியை சேர்ந்த அகர்வால் என்பவருக்கு 25.5 லட்சம் ரூபாய்க்கான செக் வழங்கினார். ஆனால், அந்த காசோலை (செக்) வங்கியில் பணமில்லை என்று திரும்பியது.

இந்த பிரச்சினையில், நிவாஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம்மீது அகவர் டில்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த  நீதிபதி ஸ்னிக்தா சர்வாரியா, நிறுவனத்தின் இயக்குனர்களில் ஒருவரான முனாப் படேல் மற்றும்  நிவாஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் அனைவருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.