மெர்சலில் நடித்த பிரபல நாடக நடிகர் சீனு மோகன் காலமானார்

ல்வேறு நாடகங்களில் நடித்து பிரபலமான சீனு மோகன், சில சீரியல்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  சமீப காலமாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த சீனு மோகன் இன்று காலையில் மாரடைப்பு காரணமாக  காலமானார்.

சீனு மோகன்

கிரேசி மோகனின் நாடகக்குழுவில் முக்கிய நடிகராக நடித்து வந்தவர் சீனு மோகன்.  ‘கிரேசி’ மோகனின் நாடகங்களில் சீனு என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானதால் அவர் சீனு மோகன் என்று அழைக்கப்பட்டார்.

இடையிடையே ஒருசில படங்களிலும் நடித்து வந்தார்.  பிரபுவுடன் ‘வருஷம் 16’, ரேவசதியுடன் ‘அஞ்சலி’, ரஜினியுடன் ‘தளபதி’  உள்பட பல படங்களில் நடித்திருந்த நிலையில் சமீபத்தில் இறைவி, மெர்சல்.’ஆண்டவன் கட்டளை’, ‘கோலமாவு கோகிலா’ படத்திலும் நடித்திருந்தார்.

நாடகத்துறைக்கே முன்னுரிமை கொடுத்து வந்த மோகன், இதவரை   3000க்கும் அதிகமான மேடை நாடகங்களில் மோகன் நடித்து சாதனை படைத்துள்ளார். பல குறும்படங்களிலும் மோகன் நடித்துள்ளார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றி வந்த சீனு மோகன் கடந்த சில மாதங்களாக  சிறுநீரகப் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக அவரது உயிர் பிரிந்தது.