யூடியூப்பில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ள செல்லம்மா பாடல்….!

கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட டாக்டர் படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இந்த படத்தை சிவகார்த்திகேயனின் SK ப்ரொடுக்ஷன்ஸ் மற்றும் KJR ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். யோகி பாபு,வினய்,டோனி,ஜாரா அர்ச்சனா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

தெலுங்கில் கடந்த வருடம் நானி நடித்த கேங் லீடர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியங்கா மோகன்.இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய செல்லம்மா என்ற பாடல் கடந்த ஜூலை 16ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று சமூகவலைத்தளங்களில் செம வைரல் ஆகி வருகிறது. இந்த பாடலில் அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் போட்ட ஸ்டெப்பை பலரும் ட்ரை செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்த பாடல் சமீபத்தில் அதிகம் லைக் செய்யப்பட்ட சிவகார்த்திகேயன் பாடலாக ஒரு சாதனையை நிகழ்த்தியது. தற்போது செல்லம்மா பாடல் லிரிக் வீடியோ யூடியூப்பில் 70 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.