தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு….மக்கள் பீதி

தூத்துக்குடி:

சீல் வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கசிவு ஏற்பட்டதாக இன்று தகவல் வெளியானது.

இதைதொடர்ந்து கலெக்டர் சந்தீப் தந்தூரி உத்தரவின் பேரில் தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாசுகட்டுப்பட்டு வாரியம் மற்றும் காவல்துறையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழு இன்று மாலை ஆய்வு செய்தனர்.

ஆலையில் லேசான ரசாயன கசிவு ஏற்பட்டிருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதை கலெக்டர் சந்தீப் தத்தூரி தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.