செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 197 பேருக்கு கொரோனா…!

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு சென்னை மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களிலும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,355 ஆக இருந்தது. இந் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரே நாளில் இன்று 197 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதனால், கொரோனோ பாதித்தோர் எண்ணிக்கை 6,552 ஆக உயர்ந்துள்ளது.  மாவட்டத்தில் இதுவரை 111 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை 3,220 பேர் குணமடைந்து வீடு திரும்ப 3,023 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி