கொரோனா பாதிப்பு: செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கரூர் விவரம்..

சென்னை:

மிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாகி வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக உள்ள நிலையில், பல தளர்வுகளும் அளிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் மக்கள் கூட்டம் மீண்டும் கூடி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய வணிகர்கள், தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்றதையடுத்து, அங்கும் கொரோனா பரவல் தீவிரமாகி வருகிறது.

சென்னையில் இன்று மேலும் 50 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் மேலும் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும்  கோயம்பேடு சந்தையில் பணியாற்றியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் கோயம்பேடு சந்தை காரணமாக  விழுப்புரத்தில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மேலும்  மேலும் 62 பேருக்கு  பாதிப்பு உறுதியாகி உள்ளது.

திருவண்ணாமலையில் 6 நபர்களுக்கும்,  கரூரில் 3 நபர்களுக்கும் இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது.