சென்னை காவல்துறையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: உதவி ஆணையர் உள்பட 8 பேருக்கு பாதிப்பு

சென்னை: சென்னையில் காவல்துறை உதவி ஆணையர் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

தலைநகர் சென்னையில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை இன்னமும் குறையவில்லை. நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பாதிப்பு இருக்கிறது.

பொதுமக்களை மட்டுமல்லாது, அரசியல்வாதிகள், மருத்துவர்கள், களப்பணியாளர்களையும் கொரோனா தாக்கி வருகிறது. இவர்கள் தவிர காவல்துறையினரும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் சென்னையில் காவல்துறை உதவி ஆணையர் உள்பட 11 போலீசாரை கொரோனா தாக்கியது. பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும், சிகிச்சை பெற்று குணம் அடைந்து பலர் உடனடியாக பணிக்கு திரும்பி உள்ளனர்.