சென்னை, இமாச்சல் விமான நிலையங்கள் சூப்பர்….ரஜினி பாராட்டு

சென்னை:

சென்னை விமான நிலையம் மற்றும் இமாச்சல் பிரதேசத்தில் உள்ள கங்க்ரா விமான நிலையம் ஆகியவற்றை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியிருப்பதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து தகவல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பதிவில், ‘‘சென்னை மற்றும் கங்க்ரா விமான நிலையங்களின் இயந்திர மற்றும் பணியாளர்களின் சேவையை ரஜினி பாராட்டியுள்ளார். அந்த விமான நிலையங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. அங்கு பணிபுரியும் ஊழியர்களின் உபசரிப்பும் நன்றாக இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.