பிரபலமான ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் ரமேஷ் கொரோனாவுக்கு பலி..!

சென்னை: சென்னையில் பிரபலமான ஜன்னல் பஜ்ஜி கடை உரிமையாளர் ரமேஷ் கொரோனாவுக்கு பலியான சம்பவம் மயிலாப்பூர் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூரின் பிரசித்தி பெற்ற கபாலீசுவரர் கோயில் அருகே, 30 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் ஜன்னல் பஜ்ஜி கடை, மயிலாப்பூரின் அடையாளமாகும். அதனை நடத்தியவர் உரிமையாளர் ரமேஷ். அந்த கடையில் எப்போதும் கூட்டம் அலைமோதும்.

சில நாள்களுக்கு முன், ரமேஷூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்  நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் அவரின் வாடிக்கையாளர்களின் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.