சென்னை

சென்னையை சேர்ந்த ஒரு சிறுமி தனது பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக சேர்த்து வைத்த ரூ.1.5 லட்சத்துக்கு கண்காணிப்பு காமிரா வாங்கி நன்கொடையாக அளித்துள்ளார்

சென்னையை சேர்ந்த சிறுமி ஸ்ரீஹிதா. இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தந்தை சத்யநாராயணா. சத்யநாராயணாவின் நண்பர் ராயப்பேட்ட சரக காவல்துறை துணை ஆணயர் கிருஷ்ணமூர்த்தி ஆவார். இவர் ஒருமுறை சத்யநாராயணாவிடம் கண்காணிப்பு காமிராவின் அவசியம் பற்றி கூறி உள்ளார்.

அதை சத்யநாராயணா தனது மகன் யதின் மற்றும் மகள் ஸ்ரீஹிதாவிடம் கூறி உள்ளார். ஸ்ரீஹிதா முன்னாள் காவல்துறை அதிகாரியும் தற்போதைய புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான கிரன் பேடியின் தீவிர அபிமானி ஆவார். கிரண் பேடியின் வழியில் தாமும்  நாட்டுக்கு உதவி செய்வதில் ஸ்ரீஹிதா ஆர்வம் கொண்டுள்ளார்.

ஏற்கனவே தனது சேமிப்பு மூலம் ராயப்பேட்ட சரக காவல்துறையினருக்கு 30 கண்காணிப்பு காமிராக்களை தனது தந்தை மூலம் ஸ்ரீஹிதா வாங்கி கொடுத்துள்ளார். தற்போது அவருக்கு பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக அவர் ரூ. 1.5 லட்சம் சேமித்து வைத்துள்ளார். அதை கண்காணிப்பு காமிரா வாங்குவதற்காக கொடுக்க முடிவு செய்துள்ளார்.

அதை ஒட்டி அவர் தனது தந்தையின் நண்பர் காவல்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தியிடம் தனது முடிவு குறித்து தெரிவித்துள்ளார். அதன் பிறகு தனது தந்தை சத்யநாராயணா மற்றும் சகோதரர் யதினுடன் ஸ்ரீஹிதா ரூ. 1.5 லட்சத்துக்கு கண்காணிப்பு காமிரா மற்றும் உபகரணங்களை நன்கொடையாக அளித்துள்ளார்.

 

நன்றி : தி இந்து