சென்னை:

ரெஜினா என்பவர் பொறியியல் கல்வி முடித்தவர். ஆனால் இவருக்கு வேலை கிடைப்பது பெரிதும் கடினமாக இருந்தது. இவரது விண்ணப்பம் ஒவ்வொரு நிறுவனமாக மாறி மாறி சென்றது. விண்ணப்பத்தை பார்த்து நிறுவனங்களில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வரும். இவரது அழகை பார்த்ததும் நேர்காணல் நடத்துபவர்கள் புன்னகையுடன் வரவேற்பார்கள்.

ஆனால், அவரது கல்வி சான்றிதழ்களில் வித்தியாசமான பெயரையும், மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கை) என்ற தகவலை பார்த்தவுடன் நேர்காணல் நடத்துபவர்களின் முகம் மாறிவிடுகிறது. ‘‘வீட்டிற்கு செல்லுங்கள் அழைப்பு வரும்’’ என்று மட்டும் கூறி அனுப்பிவிடுகிறார்கள்.

இதனால் அவர் வேதனையுடன் வீட்டுக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு பதிலாக அதே பணிக்கு மூன்றாம் பாலினத்தவரை நியமனம் செய்வதற்கு குறைந்தளவு துணிச்சல் தான் தேவை. ஆனால் இதை செய்ய மறுக்கின்றனர்’’ என்றார்.

பெரி ஃபெரே என்ற லாப நோக்கமற்ற அமைப்பின் நிறுவனர் நீலம் பல்ரெச்சா என்ற பெண்ணின் சந்திப்பு நிகழ்ந்தவுடன் ரெஜிமாவுக்கு இருந்த தடை கற்கள் உடைந்தது. இந்த அமைப்பு மூன்றாம் பாலினத்தவருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் ‘கொலப்பசி’ என்ற டேக் அவே ரெஸ்டாரென்டில் ரெஜிமாவுக்கு வேலை கிடைத்தது.

‘‘மூன்றாம் பாலினத்தவர் நலனுக்காக பல அமைப்புகள் செயல்படுகிறது. ஆனால் பெரி ஃபெரே குறுகிய காலத்தில் அனைத்து நெட்வொர்க் உள்ளேயும் ஊடுறுவியுள்ளது. வேலை தேடும் மூன்றாம் பாலினத்தவரு க்கு தேவையான வேலைவாய்ப்பில் சேர்த்துவிடுவதில் நீலம் சிரமம் எடுத்துக் கொள்வார். ஒவ்வொரு நேர்கானலுக்கு பிறகும் சம்மந்தப்பட்ட நபரின் கருத்துக்களை கேட்டு சந்தைக்கு ஏற்ப செயல்படுகிறார்’’ என்றார் ரெஜிமா.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்ப நீலம் பெங்களூருவில் ஒரு பன்னாட்டு வணிக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அந்த நிறுவனம் சமூக மேம்பாட்டு பணியில் ஈடுபடபோவதாக அறிவித்தது. இதற்கு ஏற்ற ஆலோசனைகளை வழங்குமாறு ஊழியர்களை அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது. அப்போது நீலம் மூன்றாம் பாலினத்தவரின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பு அளி க்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இது குறித்து நீலம் கூறுகையில், ‘‘ கார்பரேட் நிறுவனங்களுக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கும் தொடர்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு இலவச ப்ளாட்ஃபார்ம் ஏற்படுத்தப்பட்டது. இது பல காரணங்களால் நடைமுறைபடுத்த முடியவில்லை என்றாலும், இந்த திட்டத்திற்கு எனது மூத்த அதிகாரிகளிடம் இருந்து பாராட்டுக்கள் கிடைத்தது. அதனால் இந்த திட்டத்தை நான் நிறுத்தவில்லை’’ என்றார்.

பின்னர் நீண்ட குழப்பத்திற்கு தான் கடந்த ஏப்ரலில் பெரி ஃபெரே உருவானது. நீலம் மற்றும் அவரது குழுவினரும் இணைந்து சென்னை மயிலாப்பூரில் ஒரு அலுவலகத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

‘‘ இதன் மூலம் 30 பணியாளர்கள் கொண்ட நிறுவனங்களை இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. குறிப்பாக இளம் திருநங்கைகளை அதிகம் ஊக்குவித்தோம். 18 முதல் 28 வயதிலானவர்கள் தான் அதிகம் படித்தவர்கள் இருக்கிறார்கள் என்பதை இதை தேர்வு செய்தோம். குறிப்பட்ட சம்பளத்துடன் வேலை வாய்ப்பை பெறுவதற்கு கல்வியின் தரம் மிகவும் கடினமாக உள்ளது. அதனால் வேலைக்கு ஏற்ற பயிற்சியும், திறன் வளர்ப்புக்கும் பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது’’ என்றார் நீலம்.