அதிசயம்! ஆனால் உண்மை..! – இன்றையப் போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங்!

துபாய்: இந்த ஐபிஎல் தொடரில் முதன்முறையாக தான் விளையாடும் 8வது போட்டியில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது மகேந்திரசிங் தோனியின் சென்னை அணி.

இதுவரை ஆடிய போட்டிகளில், முதல் 3 போட்டிகள் வரை டாஸ் வென்றும்கூட, பந்துவீச்சையே தேர்வுசெய்தது சென்னை அணி. ஆனால், அதன்பிறகு ஆடிய 4 ஆட்டங்களிலும், டாஸ் தோற்றதால் எதிரணியின் விருப்பத்திற்கேற்ப முதலில் பந்துவீச வேண்டியதானது.

தற்போதைய நிலையில், சென்னை அணி புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இதுவரை 5 தோல்விகள் மற்றும் 2 வெற்றிகள் அதன் கணக்கில் உள்ளன.

இன்று நீண்ட காத்திருப்பிற்கு பிறகு டாஸ் வென்று, கடும் விமர்சனங்களை சந்தித்த காரணத்தால், ஃபார்ம் இல்லாமல் இருக்கும் தோனி, பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

சென்னை அணி, இந்த ஐபிஎல் தொடரில் இப்போதுதான் முதலில் பேட்டிங் செய்கிறது என்பது கவனிக்கத்தக்கது.