ஐஎஸ்எல் கால்பந்து – கேரளாவை 3-1 கணக்கில் வீழ்த்திய சென்னைக்கு 2வது வெற்றி!

சென்னை: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் லீக் போட்டி ஒன்றில், சென்னை அணி கேரளாவை 3 -1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

உள்நாட்டுத் தொடரான ஐஎஸ்எல் கால்பந்து போட்டித் தொடரில் சென்னை அணியின் செயல்பாடு சிறப்பாக இல்லைதான். இதுவரை 2 வெற்றிகளை மட்டுமே சென்னை அணி பெற்றுள்ளது.

கேரளாவுடனான லீக் போட்டி சொந்த மண்ணில் நடைபெற்றது. இதில், போட்டி தொடங்கிய 4வது நிமிடத்திலேயே சென்னை அணி ஒரு கோல் அடித்தது.

பின்னர் 10வது நிமிடத்தில் கேரள அணியும் கோல் அடிக்க, போட்டி சமனில் இருந்தது. பின்னர் 30வது மற்றும் 40வது நிமிடங்களில் சென்னை அணி அடுத்தடுத்து 2 கோல்கள் அடிக்க, சென்னை அணி 3 கோல்கள் அடித்தது.

ஆனால், இரண்டாவது பாதியில் இரண்டு அணிகளாலும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் வெற்றி சென்னை அணியின் வசமானது. இத்தொடரில் சென்னை அணிக்கு இதுதான் இரண்டாவது வெற்றி.

You may have missed