ஐஎஸ்எல் கால்பந்து – 7வது வெற்றியுடன் அரையிறுதி வாய்ப்பை அதிகமாக்கிய சென்னை அணி!

கொல்கத்தா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஆறாவது சீசன் லீக் போட்டி ஒன்றில், கொல்கத்தாவை 3-1 என்ற வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை அணி. இதன்மூலம் சென்னைக்கான அரையிறுதி வாய்ப்பு அதிகமாகியுள்ளது.

கொல்கத்தா அணி ஏற்கனவே அரையிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், சென்னை அணியை சந்தித்தது.

போட்டித் தொடங்கிய 7வது நிமிடத்தில் சென்னை அணி ஒரு கோல் அடித்தது. பின்னர் 40வது நிமிடத்தில் சென்னை அணிக்கு இன்னொரு கோல் கிடைத்தது. சென்னை அணி இடைவேளைக்கு முன்னதாக 2-1 என்று முன்னிலைப் பெற்ற நிலையில், கொல்கத்தா அணி ஒரு கோல் அடித்தது.

பின்னர் ஆட்டம் முடியக்கூடிய கூடுதல் நேரத்தில் சென்னை அணியின் வால்ஸ்கிஸ் எளிதான ஒரு கோலை அடித்தார். இறுதியில், 3-1 என்ற கோல்கணக்கில் சென்னை அணி சிறப்பான வெற்றியைப் பெற்றது.

சென்ன‍ை அணி இத்தொடரில் இதுவரை விளையாடிய 16 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்வி என்று மொத்தம் 25 புள்ளிகளைப் பெற்று 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன்மூலம் அரையிறுதிக்கான வாய்ப்புகளை அதிகரித்துக் கொண்டுள்ளது சென்னை அணி. கொல்கத்தா அணி 33 புள்ளிகளுடன் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டது.