பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் மைசூரு வரை நீட்டிப்பு

சென்னை

சென்னையில் இருந்து பெங்களூரு வரை செல்லும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்மைசூரு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தினமும் பெங்களூரு வரை பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகிறது. கர்நாடகா மற்றும் தமிழ் நாட்டை சேர்ந்த ரெயில் பயணிகள் பெங்களூரு வரை இயங்கி வரும் ரெயிலை மைசூரு வரை நீட்டிக்க நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதை தற்போது ரெயில்வே நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது.

தென் மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை – பெங்களூரு எக்ஸ்பிரஸ் எண் 12609 மைசூரு வரை நீட்டிக்கப்பட்டுளது. இந்த நீட்டிப்பு ஜனவரி 15 ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது. இந்த ரெயில் சென்னையில் இருந்து நண்பகல் 1.35க்கு சென்னையில் இருந்து கிளம்பி மாலை 6.05க்கு பெங்களூரு வந்து அடையும். மாலை 6.10 க்கு பெங்களூருவில் இருந்து கிளம்பும் இந்த ரெயில் இரவு 11.30க்கு மைசூரை வந்தடையும்.

மைசூருவில் இருந்து 12610 எண் உள்ள இந்த ரெயில் ஜனவரி 16 முதல் காலை 4.40 மணிக்கு கிளம்பி பெங்களூருவுக்கு 7.45 மணிக்கு வந்து சேரும். அதன் பிறகு பெங்களூருவில் இருந்து இந்த ரெயில் காலை 8.02 க்கு புறப்பட்டு சென்னக்கு நண்பகல் .30க்கு சென்னை வந்தடையும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.