என்ஆர்ஐ தொழிலதிபர் வீட்டில் கொள்ளை! போலி கையெழுத்துபோட்டு செக்கை மாற்ற முயன்ற காவலாளி தலைமறைவு

சென்னை:

திருவான்மியூர் லட்சுமிபுரம் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த காவலாளி, அங்கிருந்த செக்கை எடுத்து, அதில் போலியாக  கையெழுத்துபோட்டு பணம் எடுக்க முயற்சித்த நிலையில், வங்கி அதிகாரிகள் சந்தேகம் அடைய, பணம் எடுக்க வந்த  காவலாளி திடீரென தலைமறை வானார்.

சென்னை திருவான்மியூர் லட்சுமிபுரத்தில் தொழிலதிபர் லியாகத் அலி வீட்டில் 46 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. லியாகத் அலி தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நேரத்தில் நகை கொள்ளையடிக்கப்பதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடியிருந்து வரும் தொழிலதிபர் லியாகத் அலி அங்கு  ஒரு வணிகத்தை நடத்தி வருகிறார். அவ்வப்போது சென்னைக்கு வருகை தந்தது,  திருவானன்மியூரில் உள்ள லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள அவரது வீட்டில் தங்கிங்ச செல்வது வழக்கம். இந்த விட்டை கவனித்துக்கொள்ள ரவி என்பரை லியாகத் நியமித்து இருந்தார்.

இந்த நிலையில், அவரது கையெழுத்திட்ட ரூ.2.5 லட்சத்துக்கான காசோலை ஒன்றை, வீட்டின் காவலாளி ரவி செயின்ட் தாமஸ் மவுண்ட் கனரா வங்கி கிளையில் மாற்ற முயன்றுள்ளார். அதில் இருந்த கையெழுத்து வேறுபடவே, உஷாரான வங்கி அதிகாரிகளி, இது தொடர்பாக லியாகத் அலியுடன் போனில் பேசினர். இதனால் அதிர்ச்சி அடைந்த லியாகத் அலி பணி கொடுக்க வேண்டாம் என்று கூறினார். அதற்குள் செக்கை மாற்ற வந்த காவலாளி தலைமறைவாகி விட்டார்

இந்த நேரத்தில் லியாகத் அலி குடும்பத்தோடு, ஈரோட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டிருந் தார். வங்கியின் போனைத்  தொடர்ந்து, தனது வீட்டு காவலாளிக்கு லியாகத் போன் செய்ய, அவரது போன் சுவிட்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

இதையடுத்து, தனது உறவினரிடம் கூறி, வீட்டுக்கு சென்று பார்க்க சொன்னபோது, அங்கு வீட்டின் அறைகள் உடைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் லியாகத் உடடினயாக சென்னை திரும்பினார்.

இந்த கொள்ளையின்போது வீட்டில் இருந்த சுமார் 46 சவரன் நகைகள் திருடு போனது தெரிய வந்துள்ளது. மேலும் வங்கி காசோலையை மாற்ற முயன்றதும் காவலாளி ரவி என்பதும் ஊர்ஜிதமாகி உள்ள நிலையில், காவலாளியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

You may have missed