பாட்னா,

யோகி ஆதித்யநாத் ஆளும் உ.பி. மாநிலத்தில் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த இளம் தம்தியினர் மீது தேசிய நெடுஞ்சாலையல் வழிமறித்து கொள்ளையடித்து,  துப்பாக்கி சூடு கொள்ளையில் ஈடுபட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த மே மாதம் திருமணம் முடிந்த சென்னை நந்தம்பாக்கத்தை  சேர்ந்த ஆதித்யா குமார் விஜயலட்சுமி தம்பதியினர், சுற்றுலாவாக டில்லி சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து இரு சக்கர வாகனம் மூலம் பல இடங்களுக்கு சுற்றியுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 3ந்தேதி டில்லியில் இருந்து இவர்களின் பயணம் ஆரம்பமானது.  உத்த ரகாண்ட், ஹரித்வார் இடங்களுக்கு போய்விட்டு டில்லி திரும்பும் வழியில் உ.பி. மாநில தேசிய நெடுஞ்சாலையில், வழிப்பறி  கொள்ளையர்களால்  மறிக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளனர். இதில் கொள்ளையர்கள் நடத்திய  துப்பாக்கி சூட்டில்கா ஆதித்யாகுமார்  காயமடைந்து,  அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார்.

இந்த கொடூர சம்பவம் முசாபர்நகர் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்த புகாரை தொடர்ந்து,  நாய் மந்தி பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், ஆதித்யாவை துப்பாக்கியில் சுட்டு வழிப்பறியில் ஈடுபட்ட ஹர்சோலி கிராமத்தை சேர்ந்த அம்ஜத் என்பவரையும், தன்வீர் என்பவரை முசாபர் நகரிலும் கைது செய்தனர்.

இவர்கள் நெடுஞ்சாலைகளில் வாகனங்களை வழிமறித்து, கத்தி முனையில் கொள்ளையடிப்ப வர்கள் என்பதும்,  கைது செய்யப்பட்டவர்கள்மீது 25 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், அதில் இரண்டு கொலை வழக்குகளும் அடங்கும் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸ் அதிகாரி கூறி உள்ளார்.

இந்த கொடூர சம்பவம் கடந்த ஜூன் மாதமே நடைபெற்றுள்ளது. ஆனால் தற்போதுதான் வெளியாகி உள்ளது.