சென்னை பேருந்து வழித்தட எண் மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:

சென்னையில் தற்போது இயக்கப்பட்டு வரும் 3 பேருந்துகளின் வழித்தட எண்ணை மாற்றி தமிழக போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.

இந்த புதிய எண் வரும் 20ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, சென்னையில் இயக்கப்பட்டு வரும் 3  மாநகர பேருந்தின் வழித்தட எண் மாற்றப்பட்டுள்ளது.

எண்ணூர்- உயர்நீதிமன்றம் செல்லும் சாதாரண பேருந்தின் வழித்தட எண் 56 Nல் இருந்து 4ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மீஞ்சூர்- உயர்நீதிமன்றம்செல்லும் விரைவுபேருந்தின் எண் 156 Nல் இருந்து 4 Mஆக மாற்றம் செய்யப்படுகிறது.

எண்ணூர்- சென்ட்ரல் ரயில்நிலையம்செல்லும் விரைவுபேருந்தின் எண் 1D cutல் இருந்து 4 Cஆக மாற்றம்.

இவ்வாறு போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.