சென்னை:

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு விடும் என்ற பயம் காரணமாக, சென்னையில் நடக்கவிருந்த வணிக நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் சுற்றுலா நகரமாக இருந்து வரும் சென்னை, வணிக ரீதியான சந்திப்புகள், இன்செண்டிவ்கள், கான்பெரன்ஸ் மற்றும் வணிக ரீதியான நிகழ்வுகளுக்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு வர்த்தக விளம்பரப்படுத்தல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வி.ஆர். சுப்புலட்சுமி தெரிவிக்கையில், சென்னையில் நடப்பதாக இருந்த ஐந்து கண்காட்சிகள் மற்றும் இரண்டு ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு பயம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் இருந்து வந்த இமேயிலில் மார் 15 மற்றும் ஏப்ரல் 15 ஆகிய நாட்களில் நடக்கவிருந்த ஜூவல்லரி கண்காட்சி உள்பட பல கண்காட்சிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

1.10 லட்சம் சதுர அடியில் பரந்து விரிந்து கிடக்கும் கன்வகேஷன் மையம் மற்றும் மூன்று கண்காட்சி ஹால்கள் ஆகியவற்றில் கடந்த மாதத்தில் 10 கான்பரன்ஸ் மற்றும் 12 கண்காட்சிகள் நடத்தப்பட்டது. இதில் லெதர், பார்மா மற்றும் சுற்றுலா துறை தொடர்பான கண்காட்சிகளும் அடங்கும்.

இதுகுறித்து சென்னையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸின் ஹோட்டலின் பொது மேலாளர் எரின் லூயிஸ் தெரிவிக்கையில், இங்கு எந்த பயமும் இல்லை என்ற போதிலும், வணிக நிகழ்வுகளில் பங்கேற்ற வருபவர்கள், பயணம் செய்வதையே தவிர்க்கின்றனர். இதன் காரணமாக ஹோட்டலில் ரூம் புக்கிங் பாதிகப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் 200 ஸ்டார் தரம் கொண்ட ஹோட்டகள் உள்ளன. இதில் 150 ஹோட்டல்கள் 3 ஸ்டார் த்ரம் கொண்டவை, எஞ்சியுள்ளவை 4 ஸ்டார் மற்றும் 5 ஸ்டார் தரம் கொண்டவை. இதில் பெரும்பாலன ஹோட்டல்கள் அண்ணா சாலை, ஜிஎஸ்டி ரோடு, பழைய மகாபலிபுரம் ரோடு மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளன.

முன்னணி நான்கு ஸ்டார் செயின் ஹோட்டல் ஒன்றின் மூத்த பிரதிநிதி தெரிவிக்கயில், கொரோனா வைரஸ் பாதிப்பு பயம் காரணமாக வணிக ரீதியான நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹோட்டல் துறைக்கு நஷ்டத்தை உண்டாக்கும் என்றார், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஹோட்டல்களில் முன்பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டால், ஹோட்டலுக்கு சில கோடி ரூபாய் நஷ்டம் உண்டாகும் என்றும் அவர் கூறினார்.