சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் பெண்ணுக்கு வெட்டு: காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை முயற்சி

சென்னை:

சென்னை சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு காதலன் ரயில் முன் பாய்ந்தார்.


கடந்த 2016-ம் ஆண்டு ஜுன் 24-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற பெண் வெட்டிக் கொல்லப்பட்டார்.

அந்த சம்பவத்தின் நினைவலைகள் இன்னும் நீங்காத நிலையில்,சென்னையில் அதேபோன்று மற்றொரு கொடுமையான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சேத்துப்பட்டு ரயில் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த தேன்மொழி என்ற பெண்ணை சுரேந்தர் என்ற இளைஞர் அரிவாளால் வெட்டி சாய்த்துள்ளார்.

அப்போது ரயில் நிலையத்தில் மக்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். இதனை நேரில் பார்த்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.

தேன்மொழி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதனையடுத்து சுரேந்தர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்றார்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த தேன்மொழி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும், சுரேந்தர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், காதலர்கள் என்றும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி