சென்னை:

மிழகத்தின் பிரதான ரெயில் நிலையமான சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், புரட்சித் தலை வர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை வண்டலூர் அருகே  கிளாம்பாக்கத்தில் கடந்த மார்ச் மாதம் 6ந்தேதி  நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி,  பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவேற்றப்பட்ட பல  திட்டங்களை யும் தொடங்கி வைத்தார். அந்த விழா வில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என  கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை ஏற்று சென்ட்ரல் ரயில் நிலையம் பெயர் மாற்றம் செய்யப்படும் பிரதமர் மோடி அறிவித்தி ருந்தார். இந்த நிலையில், தற்போது, சென்ட்ரல் ரயில் நிலைய பெயர் மாற்றத்துக்கு  மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதையடுத்து, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந் திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.