பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம்: ஏபிவிபி டாக்டர் சுப்பையா மீது 3 பிரிவுகளில் வழக்கு….

--

சென்னை:

பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்த விவகாரம் தொடர்பாக அகில பாரதிய வித்யி பரிஷத் தேசிய தலைவர் டாக்டர் சுப்பையா சண்முகம்  மீது சென்னை போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஆர்.எஸ்.எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி  அமைப்பின் தேசிய தலைவர் சுப்பையா சண்முகம் (வயது 62)  மருத்துவரான இவர்  இவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பேராசிரியராகவும், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் துறைத் தலைவராகவும் வேலை பார்த்து வருகிறார்.

அபார்ட்மென்டில் வண்டியை நிறுத்துவது தொடர்பாக அவருக்கும், பக்கத்து வீட்டு பெண்ணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பெண் ஆம்பாக்கம் காவல்துறையில் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து அவ்வப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நடந்து வந்துள்ளது. இதன் காரணமாக, டாக்டர் சுப்பையா அந்த பெண் வீட்டு வாசலில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தி உள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த பெண், இதுகுறித்து  ஆதம்பாக்கம் போலீசில் ஒரு புகாரை அளித்துள்ளார்.. அதில், “தன் வீட்டு வாசலில் சுப்பையா சிறுநீர் கழித்துவிட்டதாகவும், ஆபரேஷனுக்கு யூஸ் பண்ணின மாஸ்க் உட்பட பல குப்பைகளை வீட்டு வாசப்படியில் வீசிவிட்டு சென்றதாகவும் தெரிவித்ததுடன், இது தொடர்பான சிசிடிவி காட்சியையும் சமர்ப்பித்தார். ஆனால், போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதையடுத்து, அவரது உறவினர் ஒருவர், இந்த சிசிடிவி காட்சியை சமூக வலைதளங்களில் பரவவிட்டார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, டாக்டர் சுப்பையா மீது 3 பிரிவுகளின் கீழ் சென்னை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  பிரிவு 271, 427 மற்றும் அண்டைவீட்டு  பெண் சந்திராவை துன்புறுத்தியதற்காக தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் சென்னை நகர போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.