சென்னை,

றைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று திடீரென சென்னை ஆட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மறைந்தமுதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டம் இல்லம் நினைவிடமாக ஆக்கப்படும் என கடந்த ஆகஸ்டு  மாதத்தில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அரசின் இந்த அறிவிப்புக்கு ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தங்களின் பூர்வீக சொத்து  தீபா ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  இந்த வழக்கு விசாரணையில் உள்ளது

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஜெ. இல்லத்தை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், இன்று போயஸ் இல்லத்தில், சென்னை மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் போயஸ் இல்லத்திற்கு தற்போது வந்துள்ளனர்.

இதனால் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான ஆய்வை நடத்தி இது குறித்து அரசிடம் அதிகாரிகள் குழு அறிக்கை அளிக்கும் என்று தெரிகிறது.

பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் வருமான வரித்துறை அதிகாரிகளும் வேதா நிலையம் வந்துள்ளதாக தெரிகிறது.

வேதா இல்லத்தை அரசுடைமையாக்கும் நடவடிக்கையில் அடுத்தகட்டமாக வீட்டை அளவிடும் பணிகள் தொடங்கியுள்ளதாக உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக போயஸ் தோட்ட பகுதியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.